×

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் கோரிக்கை

சென்னை: ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை. வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப் பாதையோடு இணைக்க உதவும். இதுஉள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்’’ என ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் தெரிவித்தார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவாக விவாதித்து, தமிழ்நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Tags : L. Murugan ,Minister of Railways ,Erode- ,Tarapuram , L. Murugan's request to the Minister of Railways for the Erode-Tarapuram wide gauge railway
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...