ரவி சாஸ்திரி, கோஹ்லியிடம் விளக்கம் கேட்கிறது பிசிசிஐ: விதிகளை மீறியதால் கொரோனா

மும்பை: கொரானா விதிகளை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்டன் விராத் கோஹ்லி, கொரோனா தொற்றுக்கு ஆளான பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது. கொரோனா பரவல் இங்கிலாந்திலும் தொடர்வதால் அங்குள்ள இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தங்கியிருக்கும் விடுதி, அங்கிருந்து பயிற்சி, ஆட்டம் நடக்கும் அரங்கங்களுக்கு செல்ல மட்டுமே அணியினருக்கு அனுமதி. அதிலும் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனா தொற்றுக்கு ஆளான பிறகு இந்த கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.

இந்த கெடுபிடிகளையும் மீறி அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதனால் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கூடவே பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் பழக்கத்தில் இருந்த பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேலும் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து இந்திய அணியினர் தொற்றுக்கு ஆளானதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பிசிசிஐ விசாரணை மேற்கொண்டதில், ‘செப்.2ம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ரவி சாஸ்திரி, விராத் கோஹ்லி மற்றும் இந்திய வீரர்கள் கலந்துக் கொண்டது’ தெரியவந்துள்ளது. கொரானா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதுதான் தொற்றுக்கு காரணம் என்பதும் உறுதியாகி உள்ளது. அதனால் பிசிசிஐ நிர்வாகிகள்  அதிருப்தி அடைந்துள்ளனர். சாஸ்திரி, கோஹ்லி நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளனர். இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர், வாரியம் இந்த விஷயத்தை விசாரிக்கும். இந்த சம்பவம்  பிசிசிஐக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக  இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும். இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறாம். மேலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல் தொடர் முடிவடைய முயற்சிக்கறோம்.’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More