×

எப்படி போராடி மீள்வது இந்தியாவுக்கு தெரியும்: இங்கிலாந்து பயிற்சியாளர் பாராட்டு

லண்டன்: ‘ஆடுகளத்தில் இக்கட்டான நேரங்களில் எப்படி  போராடி மீளுவது என்பது இந்திய அணிக்கு தெரியும் ’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டன் ஓவல் அரங்கில் நடந்த இங்கிலாந்து-இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 157ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அதிலும் ஓவல் அரங்கில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா பெற்ற வெற்றி கிரிக்கெட் உலகில்  பாராட்டுகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, உள்நாட்டு, வெளிநாட்டு கிரிகெட் பிரபலங்களும் இப்படி பாராட்டும் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியார் கிறிஸ் சில்வர்வுட் நேற்று, ‘ விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்க பாராட்டு தெரிவிக்க வேண்டும். முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும், இந்தியா அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் அவர்கள் இக்கட்டான நிலையில் இருந்தனர். அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு இருந்தும், அதை செய்ய நாங்கள் தவறி விட்டோம். ஆனால்  இக்கட்டான நிலையில் இருந்து எப்படி போராடி மீளுவது என்று இந்தியாவுக்கு தெரியும். போராடி மீண்டனர். அதனால்தான் மீண்டும் சொல்கிறேன் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். கூடவே 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளனர்.’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம்  செப்.10ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்ஃபோர்ட் அரங்கில்  தொடங்கும்.

Tags : India ,England , India know how to fight back: England coach praise
× RELATED எங்கள் அணுகுமுறையில் இருந்து நாங்கள்...