அளவுக்கு அதிகமான போதை பொருள் பயன்படுத்திய ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் பிரபல ஹாலிவுட் நடிகரும், நடனக்கலைஞருமான மைக்கேல் கே.வில்லியம்ஸ் (54) வசித்து வந்தார். இவர், ‘தி வயர்’ என்ற தொடரில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரனாகவும், அபாயகரமான கிரைம் திரில்லர் டி.வி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், புரூக்ளினில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த நியூயார்க் காவல்துறையின் லெப்டினன்ட் ஜான் கிரிம்பெல், நடிகர் மைக்கேல் கே.வில்லியம்சின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்துக்கு அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல அமெரிக்க ஊடகங்கள் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, போதை பொருளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், மைக்கேல் கே.வில்லியம்ஸ் மரணம் அடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. அவரது மறைவுச்செய்தி ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டில் இருந்து, அமெரிக்காவில் போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு 93,331 பேர் அதிக போதையால் இறந்துள்ளனர். மனச்சோர்வே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Related Stories: