×

தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு அரியானாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாகிறது: பேச்சுவார்த்தை தோல்வியால் பதற்றம்

புதுடெல்லி: கர்னால் மாவட்டத்தில் தங்கள் மீது தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியானாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மகா பஞ்சாயத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரியானாவில் கடந்த வாரம் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். இதில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ‘மண்டையை உடையுங்கள்’ என போலீசாருக்கு உத்தரவிடும் வீடியோ காட்சி , சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்த தடியடியில் ஈடுபட்ட போலீசார், உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கர்னாலில் நேற்று குவிந்தனர். அங்கு அவர்கள் மகாபஞ்சாயத்து கூட்டத்தையும் நடத்தினர். இவர்களை சமாதானப்படுத்த அரியானா அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தீவிரமானது. தொடர்ந்து, கர்னால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்குக சீர்கெடும் அபாயம் ஏற்பட்டதால், கர்னால், குருஷேத்ரா, கைதல், ஜிந்த், பானிபட் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பகல் முதல் இணைய, குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தப்பட்டது.

Tags : Haryana , Farmers' struggle intensifies in Haryana in protest of caning: Tensions over failure of talks
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...