மாணவிக்கு கொரோனா தொற்று தனியார் பள்ளி ஒருவாரம் மூடல்

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தாய், தந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 103 பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதற்கிடையில், நேற்று மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வாரத்துக்கு பள்ளி மூடப்பட்டது. தொடர்ந்து 14 நாட்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்களை கண்காணித்து யாருக்காவது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>