சென்னையின் மின் கட்டமைப்பை மேம்படுத்த புதிய துணை மின் நிலையங்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை பெருநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, புதிய துணை மின் நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது:

* சென்னை பெருநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 6 எண்ணிக்கையிலான 400 கி.வோ துணை மின்நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

* கும்மிடிப்பூண்டி மற்றும் வடசென்னையில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் மின்சாரத்தை வெளியேற்ற தேர்வாய் கண்டிகையில் 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் புளியந்தோப்பில் 400 கி.வோ வளிமகாப்பு துணை மின் நிலையம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

* கிண்டி, கொரட்டூர் மற்றும் தரமணி ஆகிய இடங்களில் 400 கி.வோ வளிமகாப்பு துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் கோயம்பேட்டில் ஒரு 400 கி.வோ வளிமகாப்பு துணை மின் நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* மின் தொடர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், மாநிலம் முழுவதும் உள்ள உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை ெவளியேற்றவும், வெள்ளாள விடுதி, இடையர்பாளையம், ஒட்டப்பிடாரம், சமூகரெங்கபுரம் மற்றும் பரளி ஆகிய 5 இடங்களில் 400 கி.வோ துணை மின்நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. சமூகரெங்கபுரம் 400 கி.வோ துணை மின் நிலைய பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன. மேற்கண்ட 5 எண்ணிக்கை 400 கி.வோ துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமையகம், மாம்பலம், திருவான்மியூர், எண்ணூர், கணேஷ் நகர், கே.கே.நகர், பல்லாவரம் மற்றும் மாம்பாக்கம் ஆகிய 11 இடங்களில் 230 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த 11 எண்ணிக்கை கொண்ட 230 கி.வோ துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

* இதை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் எளிய முறை இயக்கத்திற்காகவும் 17 இடங்களில் 230 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 17 எண்ணிக்கையிலான 230 கி.வோ துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>