×

குமரியில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழை: ஆர்ப்பரித்து கொட்டுகிறது திற்பரப்பு அருவி

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது. மலை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் கன மழை பெய்தது. இதனால் குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிபாறை அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கியது. எனவே நேற்று முன்தினம் இரவு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. இன்று காலை 1,536 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 790 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் கோதையாற்றில் பாய்ந்து திற்பரப்பு அருவியில் விழுந்து தாமிரபரணி ஆறு வழியாக கடலில் கலக்கிறது. கோதையாறு தண்ணீர் திறக்கப்பட்டதால் வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்ந்து 3வது நாளாக தண்ணீர் கொட்டுகிறது. நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில், இரவு மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் தற்ேபாது ேமகம் சூழ்ந்து இருண்டு திற்பரப்பு சுற்றுவட்டார பகுதிகளில் குளுகுளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்து தடுப்பணையில் பாயும் தண்ணீரில் நீராடி செல்கின்றனர்.

Tags : Kumari , Scattered rain, tidal waterfall, irrigation
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து