×

திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் பூத்துக்குலுங்கும் அரளி பூக்கள்

சின்னாளபட்டி: திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பூத்துக்குலுங்கும் அரளி பூக்கள் வாகனங்களில் செல்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரளி பூக்களை பறித்து செல்கின்றனர்.  தேசிய 4 வழிச்சாலைகளில், இரவு நேரங்களில் எதிர்ப்புற சாலையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் வாகன ஓட்டுனர்களுக்கு கண் கூச்சம் ஏற்பட்டு விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு கண் கூச செய்யும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புசுவரில் அரளி செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சீசன் துவங்கியதையடுத்து, அரளி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-கரூர் தேசிய 4 வழிச்சாலைகளில் அரளி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இவை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளன. பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் இவற்றை ரசித்தபடி செல்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பூக்களை பறித்து செல்கின்றனர்.

Tags : Dindigul, Madurai, 4 lanes, Arali flowers
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...