ரூ.7.5 லட்சம் கோடி சொத்து கொண்ட முதல் இந்தியரானார் முகேஷ் அம்பானி!!

மும்பை : பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 100 பில்லியன் மதிப்பிலான சொத்துக்களை கொண்ட முதல் நபராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார்.இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக ரிலையன்ஸ் குழும சொத்துக்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 9% அளவிற்கு ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததை அடுத்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது.

ஏற்கனவே ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15.9 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து உலகின் 12வது பணக்காரராக அவர் உருவெடுத்துள்ளார். மேலும் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அதாவது 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை கொண்ட முதல் இந்திய பணக்காரராகவும் முகேஷ் அம்பானி உருவாகி உள்ளார்.

Related Stories:

More