×

காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.. முதல் மாநிலமாக கைதிகளுக்கு 100% தடுப்பூசி செலுத்தியதாகவும் பெருமிதம்!!

சென்னை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்.

*காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம் எண் II-ஐ முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.

*அருப்புக்கோட்டையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.

*மயிலாடுதுறை, திருப்பத்தூரில் இயங்கி வரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.

*அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் நிறுவப்படும்.

*அரசு சட்டக் கல்லூரிகளில் சர்வதேச பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் சட்ட மாநாடுகள் நடத்தப்படும்.

*திருவண்ணாமலை போளூரிலும், புதுக்கோட்டை திருமயத்திலும் தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

*தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும்.

*கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

*உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடி செலவில் கட்டப்படும்.

*சிறைகளில் கொரோனா தொற்று இல்லை.சிறைவாசிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

*கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சிறைச்சாலைகள் அமைக்கப்படும். சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.



Tags : UK , காரைக்குடி
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...