சூடுபிடிக்கும் மேற்கு வங்க இடைத்தேர்தல்!: பவானிபூர் தொகுதியில் நாளை முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை முதல் பவானிபூர் தொகுதியில் இடை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். மேற்குவங்க சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

தற்போது முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, பதவியை தொடர வேண்டும் என்றால் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்கத்தின் பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

நாளை முதல் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி தேர்தல் தீவிர பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க மாநிலத்தில் வரும் 30ம் தேதி பவானிப்பூர், ஜாங்கிப்பூர் மற்றும் சம்சேர்கண்ட்ச் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>