'தாராபுரம் வழியாக ஈரோடு - பழனி இடையே ரயில் பாதை அமைத்திடுக'!: ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் கோரிக்கை..!!

டெல்லி: ஈரோட்டுக்கும், பழனிக்கும் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை தாராபுரம் வழியாக செயல்படுத்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இடம் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் குறித்து இரு கோரிக்கைகளை அமைச்சர் எல்.முருகன் முன்வைத்தார்.

ஈரோடு - பழனி இடையிலான பிராட்கேஜ் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார். தாராபுரம் பகுதியின் வளர்ச்சிக்கும், விவசாய விளை பொருட்கள் வணிகத்தை அதிகரிக்கவும் ரயில் பாதை கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை என்றும் அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் புண்ணிய தலங்களை இணைக்கக்கூடிய வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இவ்விரு கோரிக்கைகள் பற்றி பரிசீலிப்பதுடன் தமிழகத்தில் ரயில் சேவைகள் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related Stories:

>