காஷ்மீரின் மாஜி முதல்வருக்கு வீட்டுக்காவல் : ஆப்கானியர்களுக்காக கவலைப்படும் ஒன்றிய அரசு காஷ்மீரிகளின் உரிமைகளை பறிப்பதாக சாடல்!!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, தான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, இன்று அவர் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், ஒன்றிய அரசு பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒன்றிய அரசு ஆப்கான் மக்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்டு பேசுகிறது. ஆனால் காஷ்மீரிகளுக்கு அதே உரிமையை வேண்டுமென்றே மறுக்கிறது.

ஒன்றிய அரசு கூறுவது போன்று காஷ்மீரில் நிலைமை இயல்பாக இல்லை என்பதால், இன்று நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இது, அவர்களின் பொய்யான செய்திகளை அம்பலப்படுத்துகிறது’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது  மெஹபூபா முப்தி தான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>