×

உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் : 70% மக்கள் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்தனர்!!

புதுடெல்லி:உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு மற்றும் பிரபலம் குறித்து ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வில் உலகின் 13 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர்.  ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் அடங்குவர்.

இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். இந்த கணக்கெடுப்பில் சுமார் 70 சதவிகித மக்கள் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோரை விடவும் பிரபலமான தலைவராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி 70%

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64%

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63%

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48%

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 45%

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39%

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 38%

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35%

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34%

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 25%

Tags : PM ,Modi , தி மார்னிங் கன்சல்ட்,மோடி
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...