×

மாவட்டத்தில் தொடர் மழை ஈரோட்டில் அதிகபட்சமாக 55 மி.மீட்டர் கொட்டியது-குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது-குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில்  வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக மழை  பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  அதிகபட்சமாக ஈரோட்டில் 55 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெருந்துறை  10, கோபி, 5, பவானி 10, நம்பியூர் 12, சென்னிமலை 3, மொடக்குறிச்சி 7,  கவுந்தப்பாடி 18.4, எலந்தை குட்டைமேடு 2.4, அம்மாபேட்டை 7.2,  குண்டேரிப்பள்ளம் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில்  சராசரி மழையளவு 8.4 மில்லி மீட்டர் ஆகும்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  நேற்று காலை நிலவரப்படி 102 அடியாகவும், அணைக்கான நீர் வரத்து 812 கன  அடியாகவும் இருந்தது. மழை காரணமாக காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு  திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 377 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  ஆற்றில் குடிநீர் தேவைக்காக 373 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதேபோல  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.690 அடியாகவும், நீர் வரத்து  22,076 கன அடியாகவும் இருந்தது. மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு ஆற்றில்  திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீர் அளவு 5 ஆயிரம் கன அடியாக  குறைக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால் பாசனத்திற்கு 650 கன அடி  திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே  தொடர் மழையின் காரணமாக முத்தம்பாளையம் மற்றும் பெரிய சடையம்பாளையம் ஆகிய  மழைநீர் சேகரிப்பு குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

Tags : Erood , Erode: It has been raining continuously for the last 4 days in Erode district. Due to overlay circulation in the atmosphere in Tamil Nadu
× RELATED ஈரோட்டில் கட்டி முடித்து 2...