ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிதைகிறது சேதுபதி மன்னர் கோட்டை-பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் :  ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதுபதி மன்னர்கள் காலத்து ஆறுமுக கோட்டை சிதிலமடைந்துள்ளது. அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் ஊருக்கு கிழக்கே சேதுபதி மன்னர் காலத்து கோட்டை உள்ளது.

இக்கோட்டையானது அப்பகுதியில் ராமநாதபுரம் சேது சீமையை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜய ரகுநாத சேதுபதியால், பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கருப்பட்டி போன்றவை பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டை கட்டுமான அமைப்பானது 6 இதழ்களை கொண்ட ஒரு மலர் போன்ற வடிவில் அமைந்திருந்ததால் ஆறுமுக கோட்டை என்று அழைக்கப்பட்டு வரு

கிறது.

மேலும் கோட்டையின் உள்பகுதியில் இருந்து எதிரிகளை தாக்கும் விதமாக, சுவர்களில் துளைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த துளைகளின் வழியாக துப்பாக்கியால் எதிரிகளை சுடும் வகையில் இருக்கிறது. கி.பி 1801ல் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக நமது நாட்டை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருந்த கோட்டை, கொத்தளங்களை அழித்து வந்தனர். அதேபோல் ராமநாதபுரம், சேதுபதி மன்னர்களின் பல கோட்டைகளையும் அழித்தனர்.

அந்த காலக்கட்டத்தின் போது இக்கோட்டை சிதைக்கப்பட்டது. இதில் எஞ்சிய மதில் சுவர்கள் மட்டுமே மன்னர்கள் கால கோட்டை குறித்த அடையாளச் சின்னமாக உள்ளது. எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையின் மதில் சுவர்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், பாதுகாத்து சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: