×

வேலூர் அடுத்த வள்ளலாரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க துணை தாசில்தார் தடையில்லா சான்று வழங்கியது அம்பலம்-2 நாட்களில் காலி செய்ய அவகாசம்

வேலூர் : வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார், இந்திராநகரில் அரசுக்கு ெசாந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க துணை தாசில்தார் தடையில்லா சான்று வழங்கியது அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த கூட்டத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை 2 நாட்களில் காலி செய்ய அவகாசம் வழங்கி தாசில்தார் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் இடங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை பல லட்சங்களுக்கு விற்பனை செய்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேபோல் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் கடந்த 4ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில், ஆர்டிஓ (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்றைய தினமே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்ததுடன், மின் இணைப்பு, குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட துறைக்கு ேநாட்டீஸ் வழங்க, தாசில்தாருக்கு ஆர்டிஓ  உத்தரவிட்டார்.  அத்துடன், வீடுகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற உத்தரவிடப்பட்டது.  அதன்படி வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் நேற்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை 2 நாட்களில் காலி செய்ய வேண்டும்.

2 நாட்களில் காலி செய்யாவிட்டால், அரசே காலி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் என்று அறிவுறுத்தினார். இதற்கிடையே, சத்துவாச்சாரி, இந்திராநகர், வள்ளலார் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக வேலூர் துணை தாசில்தார்  சான்று வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  நிர்வழித்தடம், அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்கியதன் அடிப்படையில், மின் இணைப்பு, குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளுக்கு உடந்ைதயாக இருக்கும் அதிகாரிகள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் அரசுக்கு சொந்தமான நீர்வழித்தடங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. சில இடங்களில் நீர்நிலைகள் இருந்த தடமே தெரியாமல் ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதா? என்று மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி, அரசு இடங்களை மீட்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். அப்படி மீட்கப்பட்ட இடங்களை பொதுமக்களுக்கு ெதரியபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தடையில்லா சான்று ரத்து ெசய்ய கலெக்டர் உத்தரவு

ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்புக்காக தடையில்லா சான்று வழங்கப்பட்டது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்றினை துணை தாசில்தார் வழங்கமுடியாது. வேலூர் மாவட்டத்தில் அரசு இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றுகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தடையில்லா சான்று வழங்கக் கூடாது என்று தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சான்றுகளை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தால் அதனை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vallur ,Deputy ,Dasildar ,Vallar , Vellore: Vellore next to Sattuvachari Vallalar, Indiranagar, electricity connection to houses built on state-owned land
× RELATED மது கடைகளை மூட உத்தரவு