×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ஆஜர்..!!

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர். கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ராஜேஸ்தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் 4 பிரிவுகளில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவர் மீதும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற 15ம்  ஒத்திவைத்தார்.


Tags : DGP ,Azar , Female IPS officer, sex, former DGP
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...