போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>