×

நிலையான அரசை திட்டமிடுவதில் தாமதம்!: ஆப்கானில் சில நாட்களில் புதிய அரசு குறித்த அறிவிப்பு வெளியாகும்..தாலிபான்கள் அறிவிப்பு..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தடுமாற்றம் இல்லாத நிலையான ஒரு அரசை ஏற்படுத்த பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் சிறுது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. மூத்த இஸ்லாமிய மத தலைவர்களுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித், மூத்த இஸ்லாமிய மத அமைப்புகளுடன் எந்த கருத்து மோதலும் இல்லை என்றார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஞ்சூர் மாகாணத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள ஸபிஹூல்லா, பாதுகாப்பு காரணங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்கானில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமையை உறுதி செய்ய தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆப்கானில் புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாக தாலிபான்கள் தெரிவித்தனர். காபூலில் நடைபெறவுள்ள விழாவில் ரஷ்யா, சீனா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தாலிபான்கள் கூறியுள்ளனர்.

Tags : Afghanistan ,Taliban , Afghanistan, the new government, the Taliban
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி