சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் புதிய ஆவின் பாலகம்

சென்னை: சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் புதிய ஆவின் பாலகத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர். ஆவின் பால் பொருட்களான நெய், வெண்ணை, பால்கோவா, மைசூர்பா மற்றும் ஐஸ் க்ரீம் தவிர தற்போது பன்னீர், குலோப் ஜாமுன், பால்பேடா, ரசகுல்லா, குக்கீஸ் போன்ற 82 வகையான பால் பொருட்களின் விற்பனையை, அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது புதிய ஆவின் பாலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமைத்து அதனை நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும்சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர்.

Related Stories:

>