சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டருகே பரபரப்பு தலைமை ஆசிரியர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

சேலம்: சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ்வரன்(52). இவர் ஆத்தூர் அருகே உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வெங்கடேஷ்வரனின் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். மதியம் 1 மணி வரை நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் இந்த சோதனை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு அருகேதான் வெங்கடேஷ்வரன் வசித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி வீடு அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>