×

வேலை நேரம் முழுவதும் நிற்க வைப்பதால் உடல்நலக்கேடு கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

சென்னை: வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுவதால் உடல்நலக்கேடு ஏற்படுவதால், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.

4-9-2019 அன்று நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

Tags : Bill ,Assembly , Seating facility is mandatory for employees working in unhealthy shops and companies due to stoppage during working hours: Bill tabled in the Assembly
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...