தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகளில் விநாயகர் வழிபாடு: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். பாஜக சார்பில் ஒரு லட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் திரு அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் உங்கள் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள். வல்லப கணபதியை உங்கள் வாசலுக்கு வரச்சொல்லுங்கள். மூன்று நாட்களும் விநாயகர் அகவலை படியுங்கள். மற்ற மதத்தினரையும் உங்கள் வழிபாட்டிற்கு அழையுங்கள். மரியாதையுடன் அவர்களுக்கும் நம் மனக்காயங்களை சொல்லுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர்நிலைகளில் கரையுங்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>