ஒன்றிய குழு கூட்டம் தள்ளிவைப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றிய கூட்டத்தில், 8 கவுன்சிலர்கள் பங்கேற்க வராததால் ஒன்றிய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் (அதிமுக) தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர், 12 ஒன்றிய கவுன்சிலர்களின் அதிமுகவை சேர்ந்த இருவர் மட்டுமே கலந்துகொண்டனர். திமுகவை சேர்ந்த 4 பேர், அதிமுகவை சேர்ந்த இருவர் காங்கிரஸ், தேமுதிகவை சேர்ந்த தலா ஒருவர் உட்பட மொத்தம் 8 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஒன்றிய ஆணையர் பசுபதி தெரிவித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்காத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>