×

நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் தமிழகத்துக்கு ரூ.1095 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி

புதுடெல்லி: தமிழகத்தில் நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1095 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசியா கண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1966ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாக கொண்டு இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.54 சதவீத பங்களிப்புடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது.

இங்குள்ள 7.2 கோடி மக்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நகர்புறங்களில் வசித்து வருகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, நகரமயமாதலில் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு 9 வெவ்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல், பேரிடர் பாதுகாப்புடன் மலிவான விலையில், வீடு கட்டி கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.1,095 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடுகள் பற்றாக்குறை அளவுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வீடுகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு, வருமானத்தின் அடிப்படையில் கணக்கிட்ட போது, குறைந்தளவு வருமானம் உடையவர்களே அதிகம் பேர் வீடு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இது பிராந்திய தேசிய திட்டமிடல் மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு நகர இயக்குனரகத்துக்கு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Asian Development Bank ,Tamil Nadu , Asian Development Bank raises Rs 1,095 crore for Tamil Nadu to build housing for the urban poor
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...