×

திருப்பூர் மாவட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலும் 2 ஆசியர்களுக்கு கொரோனா: 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு கொரோனா பரிசோதனை..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலணி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலும் 2 ஆசியர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கடந்த 1ம் தேதி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வகுப்புகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ,கடந்த 4ம் தேதி திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலணி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினமே அவருடன் பணியாற்றிய 26 ஆசிரிய ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆசிரியர்ளுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு பயிலும் 59 மாணவ மாணவிகளுக்கு இன்று சுகாதாரதுறை மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளியை 3 நாட்கள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Asians ,Tiruppur ,District Government High School , Tirupur, Government High School, Asians, Corona
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...