முதல்வர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு.. பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு : ட்விட்டரில் டிரெண்டாகிறார் பெரியார்!

சென்னை : பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ட்விட்டரில் பெரியாரின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் பெரியாரின் இலக்குகளாக இருந்திருக்கின்றன என்றும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளதற்கு அடித்தளமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக சமூக நீதி நாள் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. சட்டப்பேரவையிலேயே எதிர்க்கட்சிகள் இதற்கு மனப்பூர்வமாக வரவேற்பு அளித்தன. பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன்,பாஜகவின் நயினார் நாகேந்தரன், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்களும் இதற்கு வரவேற்பு அளித்தனர். தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் பெரியாரின் வாசகங்கள் வெகுவாக பகிரப்பட்டு வருகின்ற்ன. இந்த நிலையில், ட்விட்டரில் #socialjusticeday #periyar #பெரியார் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக நெட்டிசன்கள் அதனை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

Related Stories:

>