×

ஈரோட்டில் உள்ள கால்வாயில் சிமெண்ட் பூசும் திட்டத்திற்கு விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநகராட்சி மேல்முறையீடு

ஈரோடு: ஈரோட்டில் உள்ள கால்வாயில் சிமெண்ட் பூசும் திட்டத்திற்கு விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநகராட்சி மேல்முறையீடு செய்துள்ளது. ஈரோட்டை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தில் பெரும்பள்ளம் கால்வாயில் சிமெண்ட் பூசவும் துளைகள் இடவும் திட்டமிடப்பட்டிருந்தது. கால்வாயில் மாற்றம் செய்யும் அரசின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். கால்வாயில் மாற்றங்கள் செய்து நீர்வள ஆதாரங்களை பாழடிக்காதீர்கள் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. கால்வாய் பணிகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க உத்தரவிட்டு 6 வாரத்திற்கு திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 மாநகராட்சிக்குட்பட்ட நகரங்களில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டமானது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் உள்ள 1பெரும்பள்ளம் கால்வாய் முழுவதும் சிமெண்ட் மூலம் பூசியும் கரையின் இருபக்கங்களிலும் சாலைகள் அமைத்தும் முழுமையாக கம்பிவேலிகள் அமைக்கக்கூடிய திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் முன்னெடுத்திருந்த சூழலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற வேண்டும். மாறாக வேறு எந்த திட்டத்தையும் செய்ய கூடாது என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும் என்றும் 6 வார காலத்திற்கு இது சம்மந்தமாக மேற்கொண்ட பணிகளை நடத்துவதற்கு தடை விதிப்பதாக கடந்த ஜூலை 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தனர். தற்போது இந்த உத்தரவிற்கு எதிராக ஈரோடு மாநகராட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டவிரோதமான விஷயங்கள் ஏதும் நடைபெறவில்லை. சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதனை செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அதனை விடுத்து ஒட்டுமொத்தமான திட்டத்திற்கும் தடை விதிப்பது என்பது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது என்று கூறியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த போது வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை அரசுகளே ஆக்கிரமித்தல் செய்ய கூடாது என்று கூறியிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி உச்சநீதிமன்றத்தில் பெரும்பள்ளம் திட்டம் சம்மந்தமாக மேல்முறையீடு செய்துள்ளனர்.

Tags : Supreme Court ,Erode , Erode, Smart City, Perumpallam Canal
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...