×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஷாஜியிடம் போலீசார் மீண்டும் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கோடநாடு வழக்கில் 36வது அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டவர் ஷாஜி. உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.

உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த கோடநாடு வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி தலைமையிலான 5 தனிப்படையினர் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விசாரணையில் உதகை எஸ்.பி ஆஷிஷ் ராபர்ட், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனிப்படையின் மற்றொரு தலைமையான ஆய்வாளர் வேல்முருகனும் இந்த விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 10வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராயின் உறவினரான ஷாஜியிடம் விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக இவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஷாஜியை பொறுத்தவரை இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக 36வது நபராகவும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று இவர்கள் தப்பித்து செல்லும் போது கூடலூர் அருகே இவர்கள் சோதனை சாவடியில் சிக்குகின்றனர். அப்போது இவர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளனர். அப்போது இவர்கள் அங்கிருந்து மீட்கப்படுகின்றனர். அப்போது ஜிதின் ராய் தனது உறவினரான ஷாஜியிடம் அழைத்து தான் இங்கிருந்து விடுபட்டுவிட்டதாக கூறுகிறார். அதன் அடிப்படையில் தான் இவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு தற்போது இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : Cox ,Shaji , Kodanad, murder, robbery
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளராக கூடுதலாக 5 பேர் நியமனம்