×

தஞ்சை மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது-அரசு கொறாடா கோவி.செழியன் வழங்கினார்

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை அரசு கொறாடா கோவி.செழியன், எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினர்.

தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலை பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மாதவன், நாஞ்சிக்கோட்டை சாலை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குழந்தைசாமி, கோவிலடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, பாணாதுறை தெற்கு தெரு, பாணாதுறை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் நாகேஸ்வரன், மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் காஜா முஹைதீன், பெரிய தெற்கு காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமராமநாதன், பூக்காரத்தெரு கணேசா வித்யாலயா நடுநிலைப்பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் புகழேந்தி, வேப்பத்தூர் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் சிவசங்கர், கண்டியூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை எழிலரசி, திருக்காட்டுப்பள்ளி அருள் தந்தை லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முதல்வர் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு விருதுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பிலான காசோலையும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தின் சார்பில் ரூ.50,000 மதிப்பிலான காசோலையும் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

முன்னதாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரானா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு. சுகபுத்ரா திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Korada Govt , Tanjore: Govt. Korata Govt.
× RELATED யானை தாக்கி விவசாயி பலி