×

வலங்கைமான் ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் 147 வாய்க்கால் தூர் வாரும் பணி தீவிரம்

வலங்கைமான் : வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிச்ச மங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூற்று நாற்பத்தி ஏழு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. அதனை அடுத்து ஜூன் மாதம் 16ம் தேதி கல்லணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது.

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக பொதுப்பணித் துறையின் மூலம் சுழற்சி முறையில் ஆறுகள் மற்றும் தலைப்பு வாய்க்கால்கள் தேர்வு செய்யப்பட்டு இயந்திரத்தின் உதவியோடு தூர்வாரும் பணி நடைபெற்று முடிவுற்றது.இருப்பினும் சில கிளை வாய்க்கால்கள் மற்றும் வடி வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. அதனை அடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாசன கிளை வாய்க்கால்கள் மற்றும் வடி வாய்க்கால்கள் ஆகியவை தூர்வாரும் பணி ஊரக வளர்ச்சித் துறையால் முடுக்கி விடப்பட்டது.

அதனையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையிலும் உபரிநீர் விளை நிலங்களுக்கு சேதம் ஏற்படாமல் உடனடியாக வடியும் வகையிலும் தூர்வாரப்படாத பாசன மற்றும் வடிகால் கிராம ஊராட்சியால் அடையாளம் காணப்பட்டு நிர்வாக அனுமதி கோரப்பட்டது.அதனை அடுத்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் வடிவாய்க்கால் 7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும், மேல விடையல் ஊராட்சியில் பூண்டி வாய்க்கால் 6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும், கீழவிடையல் ஊராட்சியில் விடையல் நத்தம் வடிகால் 10 லட்சம் மதிப்பீட்டிலும், கோவிந்தகுடி ஊராட்சியில் நெடுவாசல் பிரிவு கொடிக்கால் பாசன வாய்க்கால் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவூர் அக்கறை தெரு பாசன வாய்க்கால் 8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும் சந்திரசேகரபுரம் ஊராட்சியில் கிளியூர் வாய்க்கால் 7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

அதேபோன்று வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதிச்சமங்கலம், அவளிவநல்லூர் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 147 வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மற்றும் அகழிகள் தோண்டும் பணி ரூ.12 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மனித சக்தி உழைப்பில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகின்றது. நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 5 ஆயிரம் பணியாளர்கள் வரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது சம்பா சாகுபடிக்கான விதை விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சம்பா நடவு நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து பாசன மற்றும் வடி வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags : Valkyman Union , Valangaiman: Mahatma Gandhi National Rural Work in 50 Village Panchayats including Adicha Mangalam under Valangaiman Union
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...