வேதாரண்யம் அருகே சாலை சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் ஒன்றாம் தேதி ஊராட்சியில் ஆயக்காரன்புலம்- மருதூர் இணைக்கும் சாலை 2 கிலோ மீட்டர் காப்பி சாலை உள்ளது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக ஆங்காங்கே பெரும் பள்ளங்களாக தோன்றி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.தற்போது மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு வசிக்கும் 200 குடும்பத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தார்சாலையாக அமைத்து தர கோரிக்கை விடுத்தும் இதுவரை செய்து கொடுக்கவில்லை.இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தமிழக முதல்வருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் சாலையை உடனே செப்பனிட்டு தரும்படி கோரிக்கை வைத்து உள்ளனர்.

Related Stories:

>