×

ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி: தமிழகம் முழுவதும் 20 முதல் 30ஆம் தேதி வரை போராட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தேசிய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதன்படி மாநிலம் முழுவதும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Allied ,State of the Union ,Tamil Nadu , Struggle
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...