பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை மீது வழக்கு

ராய்பூர்: ‘பிராமணர்களை வெளிநாட்டினர் என்று கூறி புறக்கணித்து, அவர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள்’ என்று மக்களிடம் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பாகேல் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ‘சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சர்வ் பிராமண சமாஜ் என்ற அமைப்பு டிடி.நகர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில், முதல்வரின் தந்தை நந்த்குமார் பாகல் (75) மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வரின் தந்தை மீதே வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>