கர்நாடகாவில் 700 மாணவர்களுக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 700 கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்கனரா, கோலார் பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகளில் குறிப்பாக கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு படிக்க வந்த மாணவர்கள் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெங்களூருவில் ஒரே கல்லூரியில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோலார் மாவட்டத்தில் ஒரே கல்லூரியில் 60 மாணவர்களுக்கும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள தென்கனரா  மாவட்டத்தில் சுமார் 6 கல்லூரியில் 500 மாணவர்கள் என மாநிலம் முழுவதும் சுமார் 700 மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் தொற்று பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு கண்டறியப்பட்ட அனைத்து கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இதனிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 308 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>