பாரா பேட்மின்டன் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்

பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எச்6 பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் (22 வயது, ஜெய்ப்பூர்) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் சு மான் கெய்யுடன் நேற்று மோதிய நாகர் 21-17, 16-21, 21-17 என்ற செட் கணக்கில் 43 நிமிடம் போராடி வென்று முதலிடம் பிடித்தார். பாரா பேட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது. முன்னதாக, பிரமோத் பகத் எஸ்எல்3 பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

* வாழ்த்து மழை

சாதனை வீரர்கள் கிருஷ்ணா நாகர் மற்றும் சுஹாஸ் யதிராஜுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், கிரண் ரிஜிஜு, ஒலிம்பியன் அபினவ் பிந்த்ரா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: