×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ரடுகானு

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு (18 வயது) தகுதி பெற்றார். 3வது சுற்றில் ஸ்பெயினின் சாரா டார்மோவுடன் மோதிய ரடுகானு, அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆஷ்லி அதிர்ச்சி: மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 2-6, 6-1, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ஷெல்பி ரோஜர்சிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

முன்னணி வீராங்கனைகள் மரியா சக்கரி (கிரீஸ்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), இகா ஸ்வியாடெக் (போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஜானிக் சின்னர், மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) ஆகியோர் 4வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.


Tags : Radukanu ,US Open Tennis , Radukanu in the 4th round of the US Open Tennis
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்