களிவந்தபட்டு கிராமத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட களிவந்தபட்டு கிராமத்தில் நேற்று  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஊரக தொழிற்துறை அமைச்சர்.தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். மேலும், விவசாயிகள் நேரடியாக நெல் விற்பனை செய்யும் வகையில், ஒப்புகை ரசீதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தியாகராஜன், மறைமலைநகர் நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம் முன்னாள் எம் எல் ஏ மூர்த்தி, விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>