ஆசிரியர் தின விழா ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமையம் அலுவலகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அறம் பவுண்டேசன் சார்பாக மரக்கன்று நடவு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறம் பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் வசந்தி மற்றும் பாலாமணி, வட்டார குழந்தைகள் நல அலுவலர் பானுமதி, அறம் பவுண்டேஷன் துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், அறம் பவுண்டேஷன் தலைமை ஆலோசகர் சந்தோஷ் குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாபதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>