நடிகர் பாலா 2வது திருமணம்

திருவனந்தபுரம்: தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசுகிசு’, ‘மஞ்சள் வெயில்’, ‘வீரம்’, ‘தம்பி’ உள்பட பல படங்களில் நடித்தவர், பாலா. இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியான இவர், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2010ல் மலையாள பாடகி அம்ருதாவை பாலா காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 2019ல் கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். தற்போது தனது தோழி டாக்டர் எலிசபெத்தை பாலா 2வது திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று திருச்சூரில் நடந்தது.

Related Stories: