×

செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்தேன் உடல் நலத்துடன் உள்ளேன்: புகைப்படம் வெளியிட்டு விஜயகாந்த் ‘டிவிட்’

சென்னை: நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று புகைப்படம் வெளியிட்டு விஜயகாந்த் டிவிட்’ செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக, உடல் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடியாத நிலை விஜயகாந்த்துக்கு ஏற்பட்டது. இந்நிலையில், விஜயகாந்த் கடந்த 30ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக துபாய் சென்றார். அவருடன் அவரது மகன் சண்முகபாண்டியனும் உடன் சென்றார். தொடர்ந்து விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவும் துபாய் புறப்பட்டு சென்றார்.இந்நிலையில், நேற்று காலை விஜயகாந்த் டிவிட்டரில் தனது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ‘‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவி புரியும், செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’’ என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்த் பேன்ட், டீசர்ட், கண்ணாடி அணிந்து கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்து இருக்கிறார்.

Tags : Sathrian ,Vijayakant , I saw Chhatriyan with nurses, I am in good health: Vijaykanth 'tweeted' photo
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை