பாரா ஒலிம்பிக்ஸ் பதக்க வீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மின்டனில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கூறியுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ணா நாகருக்கும், இன்னொரு பிரிவு ஆட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சுகாஸ் யதிராஜுக்கும் வாழ்த்துகள். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இவரது சாதனை இரட்டை முன்னுதாரணம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்திய விளையாட்டு வீரர் கிருஷ்ணா நாகர் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். சுஹாஸ் யாதிராஜ், ஐஏஎஸ் அதிகாரி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.

Related Stories:

More