வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை ஒட்டி வ.உ.சி படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

சென்னை: வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி வ.உ.சி படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை ராஜாஜி சாலையில் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் துறைமுகம் வளாகம் அருகேயுள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு தற்போது முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு துறை செயலாளர்கள், அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை ஒட்டி இந்த வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதையொட்டி பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள கிண்டியில் வ.உ.சிதம்பரனாரின் நினைவிடம் அருகே மார்பளவு சிலை திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவருடைய பெயரில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருதும் மற்றும் ரூ.5 லட்சத்துடன் பாராட்டு சான்றிதழும் வருகின்ற ஆண்டு முதல் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவருடைய பெயரில் பல்வேறு புதிய திட்டங்களும் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

Related Stories:

>