மேலும் 4 மாணவர்கள், 2 ஆசிரியைக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மேலும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் 3 பேருக்கும், நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலா ஒரு மாணவனுக்கும், அரியலூர் தனியார் பள்ளி மாணவிகள் இருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த தலா ஒரு ஆசிரியைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories:

>