கலைஞர், ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா அஞ்சலி

சென்னை: கங்கனா நடித்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ள தலைவி என்ற படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இவர் தமிழில் ஏற்கனவே தாம்தூம் படத்திலும் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு கங்கனா வந்தார். அவருடன் ஒய் பிளஸ் பிரிவு படையினர் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்தார். பின்னர் கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர், சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்ஜிஆர் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories:

>