நீட் போராட்டத்தின் இறுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார்: தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி

சென்னை: சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை  நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசே இறுதி முடிவை எடுக்கலாம். நீட் போராட்டத்தின் இறுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார். பெரியார் உலகம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டம், வ.உ.சி. பெயரில் விருது வரவேற்கத்தக்கது.

Related Stories:

>