×

பொதுமக்களை அவமதிப்பதாக புகார் எதிரொலி யாரையும் ‘டா’, ‘டி’ போட்டு போலீசார் அழைக்க கூடாது: கேரள ஐகோர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: பொதுமக்களை ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்க கூடாது என்று கேரள போலீசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள போலீசார் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில்  திருச்சூர் சேர்ந்த அனில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘நான் திருச்சூரில் கடை நடத்தி வருகிறேன். என்னையும், எனது  மகளையும் கடையை பூட்ட சொல்லி போலீசார் ஆபாசமாக திட்டினர்.

இதுபொதுமக்கள் மத்தியில் எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி தேவன்ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘சமீப காலமாக கேரள போலீசார் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களிடம் போலீசார் மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்து கொள்ள கூடாது. பொது இடங்களில்  யாரையும் ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்க கூடாது. இதுதொடர்பாக டிஜிபி அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Kerala ,iCourt , Kerala iCourt warns police not to call anyone 'D' or 'D'
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...