போக்குவரத்து கழக நஷ்டத்தை சமாளிக்க பஸ் நிலையங்களில் மதுக்கடை திறக்க திட்டம்: கேரள அரசு ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் 300 க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனைக் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மதுக்கடைகள் தனியார் கட்டிடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் அரசு பஸ் நிலையங்களில் மதுக்கடைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு நேற்று திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில், ‘‘கேரள அரசு போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஆலப்புழா உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பஸ் நிலைய கட்டிடங்களில் ஏராளமான கடைகள் காலியாக உள்ளன. இங்கு அரசு மதுக் கடைகளை நடத்த, வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மதுக்கடைகளை நடத்துவதால் பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாது’’ என்றார்.

Related Stories:

>